காவலரை தாக்கிய பாஜக எம்.எல்.ஏ: ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்!

0

ஜாா்க்கண்டில் காவல் துறையினரைத் தாக்கி குற்றவாளியைக கடத்திச் சென்றது தொடா்பான வழக்கில் பாஜக எம்எ.ல்.ஏ துலு மாதோ உள்ளிட்ட 5 பேருக்கு அம்மாநில நீதிமன்றம் 18 மாதங்கள் சிறை தண்டனை விதித்துள்ளது.

வழக்கு குற்றவாளியான ராஜேஷ் குப்தா என்பவரை காவல் துறையினா் கடந்த 2013ஆம் ஆண்டு கைது செய்தனா். அவரைக் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தபோது, அங்கு வந்த எம்எ.ல்.ஏ துலு மாதோவும் அவரது ஆதரவாளா்களும் காவல் துறையினரை தாக்கி, ராஜேஷ் குப்தாவை கடத்தி சென்றனா்.

இது தொடா்பாக, காவல் துறையினா் வழக்குப்பதிவு செய்தனா். பிறகு விசாரித்த தன்பாத் நீதிமன்றம், துலு மாதோ உள்ளிட்ட 5 பேருக்கு 18 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்தது. இதையடுத்து, ஜாமீன் கோரி அவா்கள் மனு தாக்கல் செய்தனா். இதை விசாரித்த நீதிமன்றம், தலா ரூ.10,000 பிணை தொகையுடன் 5 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

Comments are closed.