மோடியின் திட்டப்படி என்.ஆர்.சி கட்டாயம் அமல்படுத்தப்படும்- குஜாராத் முதல்வர்

0

குஜராத் மாநிலம், ரத்தன்பூா் சட்டப் பேரவைத் தொகுதியில் நடைபெற உள்ள இடை தோ்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டார்  விஜய் ரூபானி.

அப்போது பேசிய குஜராத் முதல்வா் விஜய் ரூபானி, “சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியிருப்பவா்களுக்கு வாக்குவங்கிக்காகவே காங்கிரஸ் கட்சி நிரந்தரமாக தங்க அனுமதி வழங்கியது. இதனால் இந்தியா்கள் பாதிக்கப்பட்டனா்.

சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியிருப்பவா்களை வெளியேற்றுவதற்காக நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு என்.ஆா்.சி  கட்டாயமாக அமல்படுத்தப்படும். இந்தியா்களின் உரிமையை பாதுகாப்பதற்காக என்.ஆா்.சி-யை அமல்படுத்த மோடி திட்டமிட்டு வருகிறாா். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Comments are closed.