எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கே வாக்கு: வீடியோவை வெளியிட்ட ராகுல் காந்தி

0

ஹரியாணா தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டரில் பாஜக எம்எல்ஏ பக்ஷி சிங் பேசும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

மேலும் அப்பதிவில் ‘பாஜகவில் இவர் தான்ம் மிகவும் நேர்மையான மனிதர்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அசந்த் தொகுதி தற்போதைய எம்எல்வான பக்ஷி சிங், யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலம் தங்களால் தெரிந்து கொள்ள முடியும் எனவும், எந்த பட்டனை அழுத்தினாலும் அந்த வாக்கு பாஜகவுக்கு விழும்படி செய்துள்ளதாகவும் கூறுகிறார்.

Comments are closed.