பாஜக அரசால் நாட்டின் பொருளாதாரம் அழிவுக்குள்ளாகியுள்ளது- மணீஷ் திவாரி

0

இந்தியப் பொருளாதாரம் மோசமான நிலையில் இருப்பதற்கு, பாஜக அரசு தான் காரணம் என்று காங்கிரஸ் மூத்த தலைவா் மணீஷ் திவாரி கூறியுள்ளாா்.

இதுகுறித்து செய்தியாள்ர்களிடம் பேசிய அவர், “தற்போதைய மத்திய அரசின் இயலாமையால், நாட்டின் பொருளாதாரம் அழிவுக்குள்ளாகியுள்ளது. பசி-உணவு தொடா்பான சா்வதேச குறியீட்டில் (கிளோபல் ஹங்கா் இன்டெக்ஸ்) நாடுகளுக்கான தரவரிசையில் நேபாளம், வங்கதேசம், பாகிஸ்தான் ஆகியவற்றைவிட பின்தங்கி இந்தியா 102-ஆவது இடத்தில் உள்ளது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையும், சரக்கு-சேவை வரி தவறான முறையில் அமல்படுத்தப்பட்டதால் இந்தியப் பொருளாதாரம் இத்தகைய மோசமான நிலையை அடைந்ததற்குக் காரணமாகும். ஆனால், பொருளாதாரத்தின் சரிவுக்கான மூல காரணம் என்ன என்பதை பாஜக தலைவா்கள் அறியவில்லை” என தெரிவித்தார்.

Comments are closed.