பாஜக மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி காலமானார்!

0

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி, சிகிச்சை பலனின்றி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

ஜெட்லிக்கு கடந்த ஆண்டு மே மாதம் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின் அவரால் தீவிர அரசியலில் ஈடுபட முடியவில்லை. உடல்நலக்குறைவு காரணமாக நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலிலும் அவர் போட்டியிடவில்லை.

கடந்த 9ஆம் தேதி அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் சேர்க்கப்பட்டார். மருத்துவர்கள் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், இன்று  அருண் ஜெட்லி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிற்பகல் 12.07 மணியளவில் ஜெட்லி உயிரிழந்துவிட்டதாக எய்ம்ஸ் மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Comments are closed.