உன்னாவ் பாலியல் வன்கொடுமை: பாஜக எம்.எல்.ஏ. மீது குற்றப்பத்திரிகை தாக்கல்- சிபிஐ

0

உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

உத்தர பிரதேச மாநிலம், உன்னாவ் பகுதியில் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கர், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தார். அப்போது அப்பெண்ணுக்கு வயது 17.

பின்னர், இந்த வழக்கில் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு, உத்தரப் பிரதேசத்திலுள்ள சீதாபூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

அண்மையில், பாதிக்கப்பட்ட பெண் சென்ற கார் விபத்துக்குள்ளானது. இதில் அந்தப் பெண்ணின் உறவினர்கள் இருவர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த அந்தப் பெண் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாகவும் குல்தீப் மீது சிபிஐ கடந்த மாதம் வழக்குப்பதிவு செய்தது. இதைத்தொடர்ந்து, பாஜகவில் இருந்து குல்தீப் செங்கர் நீக்கப்பட்டார்.

மேலும், அப்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதில் நரேஷ் திவாரி, பிரிஜேஷ் யாதவ் சிங், சுபம் சிங் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததையடுத்து, வழக்கின் அடுத்த விசாரணை வரும் 10ஆம் தேதி நடைபெறும் என்று நீதிபதி அறிவித்தார்.

Comments are closed.