பாஜக எம்.எல்.ஏ மீது பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண், நீதிபதியிடம் வாக்குமூலம்!

0

உத்தரபிரதேசம் மாநிலம், உன்னாவ் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை, பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் பாலியல் பலாத்காரம் செய்ததாக அப்பெண் கூறினார். சமீபத்தில் அந்த பெண், தனது தாய், வழக்கறிஞர் மற்றும் உறவினர் ஒருவருடன் சேர்ந்து காரில் ரேபரேலி சென்றுக் கொண்டிருந்தார்.

அப்போது அவர் வந்த கார் மீது லாரி மோதியது. அப்பெண், வழக்கறிஞர் ஆகிய இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். இதனையடுத்து குல்தீப் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார்.

உன்னாவ் பெண் பாலியல் புகார் தொடர்பான அனைத்து வழக்குகளையும் டெல்லி சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரபிரதேச நீதிமன்றம் மாற்றியது.

பின்னர் அப்பெண் மற்றும் வழக்கறிஞர் ஆகியோர் விமானம் மூலம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரிக்க எய்ம்ஸ் மருத்துவமனையில் தற்காலிக நீதிமன்றம் அமைக்கப்பட்டது.

பின்னர் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங்கும் அவரது கூட்டாளியும் தற்காலிகமாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணிடம் நீதிபதி தர்மேஷ் சர்மா ரகசிய விசாரணை நடத்தி, பெண்ண்ணின் வாக்குமூலத்தை பதிவு செய்தி கொண்டார்.

Comments are closed.