அருணாச்சல பிரதேசம்: 12 பாஜக எம்எல்ஏக்கள் கட்சி தாவல்!

0

வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் இரண்டு அமைச்சர்கள் 12 எம்எல்ஏக்கள் உள்ளிட்ட 15 பாஜக தலைவர்கள் நேஷனல் பீப்பிள்ஸ் பார்ட்டிக்கு தாவி உள்ளனர். தேர்தல் நடைபெற உள்ள இச்சூழலில் பாஜகவிற்கு இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

கட்சியின் பொது செயலாளர் ஜர்பும் காம்ளின், மாநில உள்துறை அமைச்சர் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஆகியோருக்கு வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காத காரணத்தால் இவர்கள் கட்சியிலிருந்து விலகியுள்ளனர். ஏப்ரல் 11ஆம் தேதி அருணாச்சல பிரதேசத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் இணைந்து மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

இதனிடையே வடகிழக்கு மாநிலங்களில் உள்ள 25 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த உள்ளதாக நேஷனல் பீப்பிள்ஸ் பார்ட்டி அறிவித்துள்ளது.

Comments are closed.