நாட்டில் நிலுவையிலுள்ள 1 லட்சத்து 66 ஆயிரம் பாலியல் வழக்குகள்: விசாரிக்க ரூ.762 கோடி!

0

நாடு முழுவதும் நிலுவையிலுள்ள 1 லட்சத்து 66 ஆயிரம் பாலியல் வழக்குகளை விசாரிக்க 1,023 சிறப்பு விரைவு நீதிமன்றங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு நீதி மன்றங்களில் 1,66,882 பாலியல் வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளை விரைந்து விசாரிக்க மாவட்டம் தோறும் விரைவு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும். இரண்டு மாதங்களுக்குள் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும்” என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஜூலையில் உத்தரவிட்டது.

பாலியல் பலாத்கார வழக்குகளை விசாரிக்க ரூ.762.25 கோடி செலவில் நாடு முழுவதும் 1,023 விரைவு நீதிமன்றங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வரும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் முதல் சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் செயல்பட தொடங்கும் என்று தெரிவித்துள்து.

விரைவு நீதிமன்ற திட்டத்தை தமிழகம், மகாராஷ்டிரா, திரிபுரா, மேற்குவங்கம், மேகாலயா, ஜார்கண்ட், ஆந்திரா, பிஹார், மணிப்பூர், கோவா, மத்திய பிரதேசம், கர்நாடகா, மிசோரம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், உத்தராகண்ட்,  அசாம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

மேலும் சிறுவர், சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்படும் என இச்சட்டத்தில் வழிவகை செய்ய்ப்பட்டுள்ளது.

Comments are closed.