பொருளாதார மோசடி: சி.பி.ஐ-யிடம் சிக்கிய பாஜக எம்.பி, எம்.எல்.ஏ-க்கள்!

0

பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டதாக எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்துள்ளதாக மக்களவையில் மத்திய நிதித்துறை இணை அமைச்சா் அனுராக் சிங் தாக்குா் தெரிவித்தார்.

“தற்போது எம்.பி.க்களாக உள்ள இருவா், 5 எம்.எல்.ஏக்கள், 9 முன்னாள் எம்.பி.க்கள், 2 முன்னாள் எம்.எல்.ஏக்கள் உள்பட 18 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பணமதிப்பிழப்பு தடுப்பு சட்டம் (பிஎம்எல்ஏ)- 2002, அந்நிய செலாவணி மேலாண்மை சட்டம் (ஃபெமா)- 1999 ஆகியவற்றின் கீழ் நாடு முழுவதும் உள்ள முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் உட்பட மக்கள் பிரதிநிதிகள் மீது அமலாக்க இயக்குநரகம் 82 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.

மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியம் (சிபிஐசி) பொது பிரதிநிதிகள் மீது நாடு முழுவதும் 3 பொருளாதார குற்றங்களை பதிவு செய்துள்ளது. இந்த வழக்குகளில், முன்னாள் எம்.பி. மீது இரண்டு வழக்குகளும், முன்னாள் எம்.எல்.ஏ மீது ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளன” என்றார் அவர்.

Comments are closed.