பாஜக எம்.பி தாக்கப்பட்டதை கண்டித்து மேற்கு வங்கத்தில் பந்த்!

0

மேற்கு வங்கத்தில் பாஜக எம்.பி தாக்கப்பட்டதை எதிர்த்து இன்று பந்துக்கு மாநில பாஜக அழைப்பு விடுத்துள்ளது.

மேற்கு வங்கத்தில் பாஜக-திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர்களுக்கிடையே சமீப காலமாக அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் பாஜக அலுவலகத்தில் நேற்று தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதை அறிந்து பாரக்பூர் தொகுதி பாஜக எம்.பி. அர்ஜூன் சிங் அங்கு வந்தபோது கடும் மோதல் ஏற்பட்டது.

அந்த மோதலில் அவரது கார் அடித்து நொறுக்கப்பட்டது. அர்ஜுன் சிங்கும் தாக்கப்பட்டார். பின்னர் மருத்துவமனையில் அவரை அனுமதிதத்தனர்.

இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து, அம்மாநில பாஜக, பர்கனாஸ் மாவட்டத்தில் இன்று பந்த் விடுத்துள்ளது.

Comments are closed.