கும்பல் படுகொலைக்கு காரணமே ஆர்.எஸ்.எஸ் தான்- திக் விஜய் சிங்!

0

மும்பையில் நடைபெற்ற விஜய தசமி விழாவில் பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், “சில சமூக வன்முறைகளை, கும்பல் படுகொலை என்று பெயரிட்டு அழைக்கிறார்கள். இதன் மூலமாக, நமது நாடு மற்றும் இந்துக் கலாச்சாரம் ஆகியவற்றின் புகழை கெடுப்பதோடு, சமூகங்கள் நடுவே பயத்தை ஏற்படுத்துகிறார்கள்.

 கொலைச் சம்பவங்கள் எனக்கு அதிருப்தி அளிக்கின்றன. இந்த நாட்டின் மக்கள் சகிப்புத்தன்மையோடு வாழ வேண்டும். ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் இந்த கொள்கைக்கு பங்களிக்க வேண்டும்” என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் போபாலில், செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங், மோகன் பகவத்தின் பேச்சை விமர்சித்துள்ளார்.

‘ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறும் அறிவுரைகளை முதலில் அவரும், அவர் தலைமையிலான ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் பின் பற்றினாலே கும்பல் படுகொலைகள், வகுப்புவாத வெறுப்புப் பிரச்சனை போன்றவை முடிவுக்கு வந்துவிடும். ஆர்எஸ்எஸ் அமைப்பானது, மகாத்மா காந்தியின் கொள்கைகளை கடைப்பிடித்தால் எந்த பிரச்சனையும் ஏற்படாது” என்றும் தெரிவித்துள்ளார்.

Comments are closed.