ஹிட்லரை போல நீங்களும் அழிந்துப்போவீர்கள்- பாஜகவை சாடிய சிவசேனா தலைவர்

0

மகாராஷ்டிர பேரவையில் உள்ள 288 இடங்களில், 105 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உள்ள பாஜகவை ஆட்சி அமைக்குமாறு ஆளுநர் அழைப்பு விடுத்தார். ஆனால், பாஜக ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை இல்லை என்பதால், சிவசேனா ஆட்சி அமைக்க உரிமை கோரும்.

இதனால், 56 எம்.எல்.ஏ-க்கள் கொண்ட சிவசேனா கட்சியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.

அரசியல் தலைவர்களை அச்சுறுத்தி அடிமையாக்குவது ஹிட்லரின் போக்கு. மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதற்கு பாஜக ஹிட்லரை போல செயல்படுகிறது. அந்த சர்வாதிகாரி ஹிட்லரும் ஒரு நாள் அழிந்துபோனார் என பாஜகவை சாடியுள்ளார் சிவசேனாவின் சஞ்சய் ராவத்.

காங்கிரஸ் மகாராஷ்டிராவுக்கு எதிரியும் அல்ல, டெல்லிக்கு மகாராஷ்டிரா அடிமையும் அல்ல என சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

Comments are closed.