யாருக்கு வாக்களித்தாலும் பாஜகவுக்கே செல்கிறது: வாக்காளர்கள் அதிர்ச்சி!

0

மேற்கு மகாராஷ்டிராவின் கோரேகான் சட்டப்பேரவை பிரிவு கிராமத்தில் எந்த வேட்பாளருக்கு வாக்களித்தாலும் அந்த வாக்கு பாஜகவுக்குச் செல்கிறது என்று பகீர் குற்றச்சாட்டை எழுந்துள்ளது.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஸ்ரீநிவாஸ் பாட்டீலுக்கு அளித்த வாக்குகள் பாஜக வேட்பாளர் உதயன்ரஜே போஸலே என்பவருக்கு சென்றதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஷிண்டே மேலும் கூறும்போது, “சில வாக்காளர்களிடமிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது, என்சிபி வேட்பாளருக்கு போடும் ஓட்டுக்கள் பாஜக பெயரில் செல்கிறது என்று புகார் எழுப்பினர். நான் வாக்குச்சாவடிக்கு செல்லும் நேரத்தில் நூற்றுக்கணக்கான வாக்குகள் இதுபோன்று பதிவாகியிருந்தது.

இதற்கிடையே ஒருவர் வாக்களிக்க வந்துள்ளார், அவர் பொத்தானை அழுத்தும் முன்பே பாஜகவின் தாமரை சின்னத்தில் ஒளி பளிச்சிட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக வாக்குச்சாவடி அதிகாரிகலிடம் தெரித்தபோது, உடனே சில அதிகாரிகள் எந்திரத்தை சரிபார்த்து எங்களிடம் எந்திரத்தில் பிரச்சினை உள்ளது என்று தெரிவித்தனர். அதன் பிறகு எந்திரம் மாற்றப்பட்டது என்கிறார் ஷிண்டே.

Comments are closed.