உயிரிழந்த இந்துத்துவ தலைவருக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு- உ.பி பாஜக அரசு!

0

கடந்த 18ஆம் தேதி இந்து கட்சியின் தலைமை அலுவலகத்தில், கட்சி தலைவர் கமலேஷ் திவாரி காயங்களுடன் கிடந்துள்ளார். இதனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில்:

கொல்லப்பட்ட இந்து தலைவர் கமலேஷ் திவாரி குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்கவும், சீதாபூர் மாவட்டத்தில் உள்ள மெஹ்முதாபாத் வட்டத்தில் ஒரு வீடும் அவரது குடும்பத்திற்காக வழங்கப்படுகிறது.

உயிரிழந்த இந்து கட்சியின் கமலேஷ் திவாரி மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீதான வழக்கு விரைவு நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட வேண்டும். திவாரி மரணத்தில் சதி செய்தவர்கள் மீது விரைவில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட வேண்டும்.

இவ்வாறு யோகி தெரிவித்தார்.

Comments are closed.