JNU மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட பாலிவுட் நடிகர்கள்!

0

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த தாக்குதலை கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக மும்பையிலும் போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்தில் பாலிவுட் நடிகர், நடிகைகள் அனுராக் காஷ்யப், தீபிகா படுகோனே, டாப்ஸி பானு, ஜோயா அக்தர், தியா மிர்சா உட்பட பலர் பங்கேற்று ஜே.என்.யுவில் நடைபெற்ற தாக்குதலை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.

ஜே.என்.யூ மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனத்தையும், நமது நாட்டில் இதுபோன்ற வன்முறைகளுக்கு இடமில்லை. இவ்வாறு செய்தவர்களை கண்டிப்பாக சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும் என பல நடிகர்கள் டிவிட்டரில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Comments are closed.