காஷ்மீர் மக்களுக்கு ஆதரவளித்த பிரிட்டன் எம்.பிக்கு இந்தியாவுக்குள் நுழைய அனுமதி மறுப்பு

0

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்காக மத்திய பாஜக அரசின் நடவடிக்கையை விமா்சித்த பிரிட்டனை சேர்ந்த பெண் எம்.பி.க்கு டெல்லி விமான நிலையத்தில் மறுக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில், காஷ்மீருக்கான அனைத்து கட்சி நாடாளுமன்ற குழுவின் தலைவராக இருக்கும் டெபி ஆபிரகாம்ஸ், குடும்பத்தினரையும் நண்பா்களையும் சந்திப்பதற்காக இந்தியாவுக்கு செல்ல இ-விசா மூலமாக பயணம் மேற்கொண்டுள்ளார். ஆனால், எவ்வித விளக்கமும் இன்றி அவரது விசா மத்திய அரசால் ரத்து செய்துவிட்டதாக தெரிவித்தாா்.

இதுகுறித்து டெபி ஆபிரகாம்ஸ் பிடிஐ செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘பிப்ரவரி 13ஆம் தேதிக்கு முன் எந்த மின்னஞ்சலும் எனக்கு வரவில்லை. அதன் பிறகே, பயணத்தை தொடங்கினேன்’ என்றாா்.

மேலும் ஆபிராகம்ஸ்-ஐ டெல்லியிலிருந்து துபைக்கு விமானம் மூலம் திருப்பி அனுப்பியதாக பிரிட்டனில் உள்ள அவரது அலுவலகம் திங்கள்கிழமை (நேற்று) உறுதிபடுத்தியது.

இந்நிலையில், இதுகுறித்து சுட்டுரையில் தெரிவித்துள்ள ஆபிரகாம்ஸ், ‘குடியுரிமை அதிகாரிகள் தன்னை மோசமாக நடத்தியதாகவும், அவர்கள் எனது இ-விசாவை ரத்து செய்து விட்டதாகவும், தெரிவித்துள்ளாா்.

இதுபோலவே, CAA சட்டத்தை எதிர்த்து சென்னை ஐஐடி வளாகத்திற்குள் நடந்த போராட்டத்தில் ஜெர்மனியை சேர்ந்த மாணவரான ஜேக்கப் லிண்டந்தல் என்பவர் கலந்துக்கொண்டார். அதற்கு அடுத்த நாளே அவரை மிரட்டி நாட்டைவிட்டு வெளியேற்றியது பாஜக அரசு.

Comments are closed.