BSNL இன் FUP வேகம் 1Mbps ஆக உயர்வு

0

இந்திய இணையதள பயனாளர்களின் பெரும் தலைவலி Fair Usage Policy எனப்படும் FUP என்பது. அதாவது இணையதள திட்டத்தில் அளவில்லாத இணைப்பை பெற்றாலும் அந்நிறுவனம் கூறிய அளவிற்கு மேல் இணையதளத்தை பயன்படுத்தினால் பயன்பாட்டு வேகம் வெகுவாக குறைக்கப்படும்.

பெரும்பான்மை தொலைதொடர்பு நிறுவனங்கள் தங்களது பயனாளர்களின் FUP இன் பிந்தைய வேகமாக 128kbps வேகத்தையே வழங்கி வரும் வேலையில் BSNL 512kbps வேகத்தை வழங்கி வந்தது. வருகிற ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி முதல் இந்த வேகத்தை 1Mbps ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது BSNL. இந்த புதிய திட்டம் BSNL இல் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

FUP என்பது அனைத்து மக்களுக்கும் இணையதள சேவை முறையாக கிடைக்கப்பெற செய்யப்பட்ட ஒரு ஏற்பாடு. ஆனால் தொலை தொடர்பு நிறுவனங்கள் இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டன. ஒரு இணையதள சேவையில் FUP க்கு முத்தைய வேகமாக 4Mbps வேகத்தை கொடுக்கும் ஒரு நிறுவனம் 2Gb (அந்தந்த சேவை திட்டத்தின் படி) தகவல் பரிமாற்றம் முடிவடைந்ததும் இணையதள வேகத்தை 128Kbps வேகத்திற்கு வெகுவாக குறைத்து விடும். இது வாடிக்கையாளரை ஒரு வகையில் மனோரீதியாக மீண்டும் கட்டணம் செலுத்தி வேகமான இணைப்பை பெற தூண்டும். இதனாலேயே FUP இணையதள பயனாளிகளின் வெறுப்பிற்குரிய விஷயமாகிப் போனது. தற்போதுள்ள BSNL இன் இந்த வேக மேம்பாடு தடையில்லாத அதே சமையம் போதுமான வேகத்துடன் பயனாளிகள் இணையதளத்தை பயன்படுத்த உதவும் என்று நம்பப்படுகிறது

இந்தியாவின் மிகப்பெரிய இணையதள சேவையான BSNL Broadband சேவையில் 9.91மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.