குடியுரிமை திருத்தச் சட்டத்தை வைத்து பிரச்சாரம் செய்த யோகி ஆதித்யநாத்

0

பீகாரின் இறுதிகட்ட தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளன. இதனால், அங்கு போட்டியிடும் இரண்டு முக்கிய அணிகளான தேசிய ஜனநாயக முன்னணி (என்டிஏ) மற்றும் மெகா கூட்டணியின் பிரச்சாரங்கள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

குடியுரிமை திருத்தச் சட்டம் (சி,ஏ.ஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்) ஆகிய மதவாத சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் 100 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்தன.

கொரோனா நோய் தொற்று பரவலால் தற்காலிகமாக போராட்ட்டத்தை கைவிட வேண்டும் என்று அரசு கேட்டுக்கொண்டதன் காரணமாகவே குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

இந்நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டம் மீதான சர்ச்சை மீண்டும் பிகார் தேர்தல் பிரச்சாரத்தில் எழுந்துள்ளது. பிகாரில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறும்போது, “பிகாரில் என்டிஏவின் ஆட்சி அமைந்தால் இந்தியாவில் ஊடுருவியவர்களை குடியுரிமை திருத்தச் சட்டத்தின்படி அரசு வெளியேற்றும்.’’ எனத் தெரிவித்தார்.

சில தினங்களுக்கு முன்னதாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா கொரோனா பாதிப்பு முடிவுக்கு வந்தவுடன் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த போவதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.