செல்வாக்கு மிக்கவர் பட்டியலில் இடம்பெற்றார் 82 வயதான CAA போராளி “பில்கிஸ்”

0

சி.ஏ.ஏ-வுக்கு எதிராக டெல்லி ஷாகின் பாக் போராட்டத்தில் கலந்து கொண்ட பில்கிஸ் (82). இவர் டைம்ஸ் இதழின் 2020ஆம் ஆண்டுக்கான செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

மத்திய பாஜக அரசு குடியுரிமை சட்டதிருத்தத்தை கொண்டு வந்தது. இதனை எதிர்த்து நாடு முழுவதும் தொடர் போராட்டங்க்ள் நடந்தது. அதுபோல தலைநகர் டெல்லியில் எதிர்கட்சிகள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு போராட்ட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் பல்வேறு வன்முறை சம்பவங்களும் நடந்தது.

இதனிடையே டெல்லி ஷாகின் பாக் பகுதியை சேர்ந்தவர் 82 வயது மூதாட்டி பில்கிஸ். இவர் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் 500க்கும் அதிகமான பெண்களுடன் சேர்ந்து அமைதியக ஜனநாயக போராட்டத்தை நடத்தி வந்தார். 82 வயதான அவர் காலை 8 மணிமுதல் நள்ளிரவு வரையில் ஒரு கையில் தேசிய கொடியை ஏந்தி போராட்டத்தில் கலந்து கொண்டார். இதனால் இவர் ‘ஷாஹீன் பாக் கி தாதி’ என்று பிரபலமாக அறியப்பட்டார். இதனையடுத்து அவர் டைம் இதழின் 2020ஆம் ஆண்டுக்கான செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியிலில் இடம்பெற்றுள்ளார்.

முன்னதாக டைம் இதழ் வெளியிட்ட பட்டியலில் மோடியின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இந்த முறை மோடியின் பெயர் அதிகம் பேசப்பட்டதற்கு காரணம் இந்திய முஸ்லிம்கள் மீது அவர் மேற்கொண்ட அடக்குமுறை தான் என்று டைம்ஸ் இதழ் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments are closed.