“கொரோனா பாதிப்பு முடிவுக்கு வந்ததும் CAA சட்டம் அமல்படுத்தப்படும்” -அமித்ஷா

0

கொரோனா பாதிப்பு முடிவுக்கு வந்ததும் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படுமென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா வந்த அமித்ஷா, கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் சட்டம் செயல்படுத்தபடாமல் உள்ளது. கொரோனா முடிவுக்கு வந்ததும் அந்த சட்டம் அமல்படுத்தபடும் என்று கூறினார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் (சி,ஏ.ஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்) ஆகிய பாஜக மதவாத சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் 100 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்தன.

கொரோனா நோய் தொற்று பரவலால் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட வேண்டும் என்று அரசு கேட்டுக்கொண்டதன் காரணமாகவே குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

சில தினங்களுக்கு முன்னர் பாஜகவின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா கொரோனா பாதிப்பு முடிவுக்கு வந்தவுடன் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்த போவதாக தெரிவித்திருந்த நிலையில் தற்போது அமித்ஷாவும் இம்மதவாத சட்டத்தை அமல்படுத்தப்போவதாக தெரிவித்துள்ளார்.

Comments are closed.