சபரிமலை விசாரணை முடிவடைந்த பிறகுதான் CAA குறித்து விசாரணை -உச்சநீதிமன்றம்

0

குடியுரிமை திருத்த சட்டம், என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகிய சட்டங்களுக்கு எதிராக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கம், பஞ்சாப், கேரளா, மத்திய பிரதேசம்,  ஆகிய மாநில அரசுகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து, தங்களது மாநிலங்களில் அமல்படுத்தப்போவதில்லை என தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இதனிடையே CAAவை அமல்படுத்த கூடாது என வலியுறுத்தி காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், ஆர்ஜெடி மூத்த தலைவர் மனோஜ் ஷா, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி மகுவா மொய்த்ரா, மக்களவை உறுப்பினர் அசாதூதின் ஓவைசி, சிபிஐ உள்ளிட்ட 140 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதுதொடர்பான வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.

மேலும் இந்த சிஏஏ சட்டத்திற்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் ஆணைமும் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில் சபரிமலை விவகாரம் தொடர்பான விசாரணை நிறைவடைந்த பிறகே, சி.ஏ.ஏ குறித்து விசாரணை நடக்கும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சரத் அர்விந்த் போப்டே அறிவித்தார்.

பின்னர் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணைக்கு தேதி முடிவு செய்ய கபில் சிபல் கோரிக்கை விடுத்திருந்தார். மூத்த வழக்கறிஞர் கபில் சிபலின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, சபரிமலை தொடர்பான வழக்கு மார்ச் 16ம் தேதி தொடங்குகிறது என உச்சநீதிமன்றம் அறிவித்தார்.

Comments are closed.