“CAA சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும்” -பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா

0

குடியுரிமை திருத்தச் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா பேசியதாவது:

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தின் பலனை அனைவரும் நிச்சயம் பெறுவீா்கள். அதை உறுதியாக நாங்கள் நிறைவேற்றுவோம். கொரோனா பாதிப்பு சூழல் காரணமாக, அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இப்போது கொரோனா பாதிப்பிலிருந்து நாடு மெல்ல விடுபட்டு வருகிறது. இந்த சட்டத்திற்கான விதிமுறைகள் இப்போது வகுக்கப்பட்டு, அதை நடைமுறைப்படுத்துவதற்கான பணிகளும் தொடங்கிவிட்டன. எனவே, குடியுரிமை திருத்தச் சட்டம் விரைவில் முழுமையான நடைமுறைக்கு வந்துவிடும் என்று அவா் கூறினாா்.

குடியுரிமை திருத்தச் சட்டம் (சி,ஏ.ஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்) ஆகிய மதவாத சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் 100 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்தன.

கொரோனா நோய் தொற்று பரவலால் தற்காலிகமாக போராட்ட்டத்தை கைவிட வேண்டும் என்று அரசு கேட்டுக்கொண்டதன் காரணமாகவே குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

இந்நிலையில் பாஜக தலைவர் கொரோனா பாதிப்பு முடிவுக்கு வந்தவுடன் இச்சட்டத்தை அமல்படுத்த போவதாக தெரிவித்துள்ளார்.

Comments are closed.