CAA போராட்டம் எதிரொலி: டெபாசிட் செய்த பணத்தை வெளியே எடுக்க வேண்டாம் -ரிசர்வ் வங்கி

0

குடியுரிமை திருத்த சட்டம், என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகியவற்றுக்கு எதிராக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கம், பஞ்சாப், கேரளா, மத்திய பிரதேசம்,  ஆகிய மாநில அரசுகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து, தங்களது மாநிலங்களில் அமல்படுத்தப்போவதில்லை என தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.

இந்நிலையில், இந்த மதவாத சட்டங்களை எதிர்த்து தொடர் போராட்டம் என ஒரு பக்கம் தொடர, மத்திய, மாநில அரசுக்கு நேரடியாக பெரியளவில் எதிர்ப்பை காட்டும் வகையில் முஸ்லிம்கள், வங்கிகளிலிருந்து தாங்கள் டெபாசிட் செய்த பணத்தை எடுக்க தொடங்கியுள்ளனர். இதனால் வங்கிகளில் பணத்தட்டுப்பாடு நிலவி திவாலாகும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.

இதன் விளைவாக, தனியார் வங்கிகளில் டெபாசிட்டிலுள்ள பணத்தை மொத்தமாக வெளியே எடுக்க வேண்டாம் என மாநில அரசுகளுக்கு மத்திய ரிசர்வ் வங்கி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுதொடர்பாக அனைத்து மாநில செயலாளர்களுக்கும் ரிசர்வ் வங்கி கடிதம் எழுதியுள்ளது. தற்போதைய சூழலின் காரணமாக தனியார் வங்கிகளிலிருந்து மாநில அரசுகள் தங்களது டெபாசிட் பணத்தை வெளியே எடுத்தால் அது வங்கி மற்றும் நிதிசார் துறைகளை பாதிக்கும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

முஸ்லிம் மக்களின் இந்த பணம் எடுக்கும் போராட்டமானது, மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் பெரும் அதிர்ச்சியை விரைவில் ஏற்படுத்தும் என தெரிகிறது.

Comments are closed.