அமித்ஷா பதவி விலக வேண்டும் -நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் உறுதி

0

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலகக்கோரி நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

டெல்லி வன்முறைக்கு மத்திய பாஜக அரசுதான் காரணம் என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டிவருகின்றன. மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகொலையை தடுக்காமல் மௌனமிருந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்றும் எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டிவருகின்றனர். இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து இரண்டு நாட்களாக நீடித்து வருகிறது. இதனால் நேற்று முழுவதும் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையே சபாநாயகர் ஓம் பிர்லா , எம்பிக்கள் யாரும் அவைக்கு முன்னரே வரக்கூடாது. அவைக்கு முன் வந்து அமளி செய்ய கூடாது. அதேபோல் போஸ்டர்களை அவைக்கு எடுத்து வந்து கலவரம் செய்ய கூடாது என்று கூறினார். இதனை மீறி செய்தால் எம்பிக்கள் இந்த கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்படுவார்கள் என்று எச்சரித்தார்.

இவ்வாறு இருக்கும்பட்சத்தில் எதிர்கட்சியினர் அமித்ஷா பதவி விலகு வேண்டும் என்பதை உறுதியுடன் தீர்மானித்துள்ளனர்.

Comments are closed.