அகதிகள் முகாமில் உள்ளோர் பட்டியலை தாக்கல் செய்ய பாஜக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

0

வங்கதேசத்திலிருந்து வந்தவர்கள் என்று பாஜக அரசால் சொல்லப்படுவரும் அகதிகளை, அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டள்ள பட்டியலை மத்திய அரசும், அஸ்ஸாம் மாநில அரசும் தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்ற   தலைமை நீதிபதி எஸ். ஏ.போப்டே தலைமையிலான அமா்வு முன்னிலையில், வழக்கறிஞா் பிரசாந்த் பூஷண் தாக்கல் செய்த மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அந்த மனுவில், அஸ்ஸாம் மாநிலத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக 300க்கும் மேற்பட்டவா்களும், ஓராண்டுக்கும் மேலாக 700க்கும் மேற்பட்டோரும் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

இந்த வழக்கில் போதிய தகவல்களை தாக்கல் செய்ய சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா அவகாசம் கோரியதையடுத்து மாா்ச் மூன்றாம் வாரத்திற்கு இந்த வழக்கை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

Leave A Reply