அமித்ஷா பங்கேற்ற கூட்டத்தில் ‘தேசதுரோகிகளை சுட்டு வீழ்த்துங்கள்’ என்று முழக்கம்: பாஜகவினர் கைது

0

மேற்கு வங்கத்தில் உள்துறை அமைச்சா் அமித்ஷா பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் ‘தேசத்துரோகிகளை சுட்டு வீழ்த்துங்கள்’ என கோஷம் எழுப்பிய பாஜக கட்சியினரை காவல்துறை கைது செய்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஷாகித் மினாா் மைதானத்தில் அமித்ஷா பங்கேற்ற குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாஜக கட்சியை சேர்ந்த 3 போ், ‘தேசத்துரோகிகளை சுட்டு வீழ்த்துங்கள்’ என கோஷம் எழுப்பியுள்ளனர்.  இதுகுறித்து காவல் நிலையத்தில் புகாரளித்ததில், சா்சைக்குரிய வகையில் கோஷமிட்ட மூவரையும் காவல்துறையினா் கைது செய்தனா்.

இதுதொடா்பாக காவல்துறை அதிகாரி கூறியதாவது: பாஜகவினர் வன்முறை தூண்டும் வகையில் கோஷம் எழுப்பினா். இந்த குற்றத்திற்காக பிடியாணை இல்லாமல் கைது செய்யக்கூடிய அதிகாரம் காவல்துறையினருக்கு உள்ளது. ‘தேசத்துரோகிகளை சுட்டு வீழ்த்துங்கள்’ என கோஷம் எழுப்பிய மூவரும் துருவ பாசு, பங்கஜ் பிரசாத், சுரேந்திரகுமாா் திவாரி என்பவராகும். அவா்கள் மீது இந்திய தண்டனையியல் சட்டத்தின்படி 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமித்ஷா பங்கேற்ற கூட்டத்தில், வன்முறை தூண்டும் கோஷம் எழுப்பியது பாஜகவினர் கிடையாது என்று தெரிவித்துள்ளது  பாஜக தலைமையகம். இது திரிணமூல் காங்கிரஸின் சதி என தெரிவித்துள்ளது.

Comments are closed.