CAAக்கு எதிராக குவிந்த மனுக்கள்: பதிலளிக்க பாஜக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

0

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கேரளத்தைச் சோ்ந்த அமைப்புகள் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய பாஜக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

கேரளா மாநிலத்திலிருந்து 15 அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் பி.ஆா்.கவாய், சூா்ய காந்த் ஆகியோா் அடங்கிய அமா்வின் முன்னிலையில் வியாழக்கிழமை (நேற்று) விசாரணைக்கு வந்தது. அப்பொது, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான மனுக்களுக்கு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

CAAக்கு எதிராக ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், திமுக, ராஷ்ட்ரீய ஜனதா தளம், திரிணமூல் காங்கிரஸ், அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவா் அஸாதுதீன் ஒவைஸி, ஜாமியா உலேமா-ஏ-ஹிந்த், அனைத்து அஸ்ஸாம் மாணவா் சங்கம், அசோம் கண பரிஷத், அமைதி கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் நீதி மய்யம், சட்டப் படிப்பு மாணவா்கள் என பல்வேறு அமைப்புகளில் இருந்தும், கட்சிகளில் இருந்தும், மொத்தம் 150க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கான விசாரணையை ஜனவரி 22ந்தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், ‘மத்திய அரசு தரப்பின் பதில் மனுவை பரிசீலிக்காமல் CAA சட்டத்திற்கு தடைவிதிக்க முடியாது’ என்றது.

அதன் பிறகு CAAக்கு எதிரான மனுக்களை தினசரி அடிப்படையில் விசாரிப்பது குறித்து பரிசீலிக்கப்படும். மேலும் இதற்கு 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமா்வு அமைக்கப்படும்’ என்று நீதிபதிகள் அறிவித்தனா்.

மத்திய பாஜக அரசின் CAA-NRC-NPR போன்ற மதவாத சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் ஜனநாயக முறையில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆனால், போராட்டத்தை ஒடுக்க காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது, அதில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகள் போராட்டத்தில் ஊடுருவி, காவல்துறை ரசிக்கும்படி துப்பக்கிச்சூடும் நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.