டெல்லியில் கலவரத்தை தூண்டிய பாஜக கபில் மிஷ்ராவுக்கு நாட்டின் உயர்ந்தபட்ச பாதுகாப்பு

0

“CAAக்கு எதிரான போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த 3 நாள் அவகாசம்” என்று டெல்லி காவல்துறையை மிரட்டி வன்முறையை தூண்டிய பாஜகவை சேர்ந்த கபில் மிஸ்ராவுக்கு  ‘ஒய் பிளஸ்’ (Y+) வகை பாதுகாப்பு வழங்கியுள்ளது டெல்லி காவல்துறை.

டெல்லி வன்முறை வெறியாட்டத்திற்கு முக்கிய புள்ளியாக இருந்த கபில் மிஷ்ராவுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதால், ‘பாதுகாப்பு வேண்டும் என்று அவரே கோரிக்கை வைத்துள்ளார். அதனால் ஒய் பிளஸ்’ (Y+) வகை பாதுகாப்பு அளிக்கப்படுள்ளது. இந்த பாதுகாப்பானது, ஆயுதங்கல் ஏந்திய காவலர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு அளிப்பதாகும். மேலும் 11 பேர் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். தேசிய பாதுகாப்பு கமாண்டோ பிரிவை சேர்ந்தவர்களும் இந்த பாதுகாப்பில் அடங்குவார்கள்.

வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட வேண்டிய பாஜக கபில் மிஷ்ராவுக்கு, நாட்டின் நான்காவது உயர்ந்த பாதுகாப்பு வழங்கியிருக்கும் டெல்லி காவல்துறைக்கு  எதிர்ப்புகள் எழுந்துள்ளது.

Comments are closed.