பாஜக அரசின் பதிலுக்கு பிறகு CAA-NRC குறித்து முடிவெடுக்கப்படும் -எடப்பாடி

0

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்ற வலியுறுத்தி, காஜி சலாவுத்தீன் முஹமது அய்யூப் சாஹீப் மற்றும் காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் தாவூத் உள்ளிட்ட 6 பேர் கொண்ட குழு முதலமைச்சர் எடப்பாடியை நேரில் சந்தித்தனர்.

அந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தாவூத், “CAA சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி முதலமைச்சரிடம் வலியுறுத்தினோம். NPR தமிழகத்தில் கொண்டுவருவதால் ஏற்படும் பாதிப்பு குறித்தும் NRC மூலம் NPRயை அனுமதி அளித்ததுபோல் ஆகிவிடும்.

தங்களது கோரிக்கைகளை கேட்டுக்கொண்ட முதலமைச்சர் மத்திய அரசிடம் இதுபற்றி எடுத்துரைப்போம் எனவும், அடுத்த 2 மாதங்களுக்கு NPRஐ அமல்படுத்த வாய்ப்பில்லை எனவும் கூறினார்.

மத்திய அரசிடமிருந்து தெளிவான பதில் கிடைத்த பிறகு அரசு முடிவெடுக்கும் என முதலமைச்சர் தெரிவித்ததாக” தாவூத் கூறினார்.

மேலும் பேசிய அவர், “தமிழகத்தில் நடந்து வரும் போராட்டங்கள் முழுவதும் மக்களின் எழுச்சிதான் காரணம். அதை கைவிடுவது குறித்து மக்களே முடிவெடுக்க வேண்டும். போராட்டங்கள் நடத்தும் எண்ணம் மக்கள் மனதிலிருந்து மாறவேண்டும் என்றால் அதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Comments are closed.