“டெல்லியில் நடந்த வன்முறை பேரதிர்ச்சியாக உள்ளது” -ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப்

0

டெல்லியில் இந்துத்துவ பயங்கரவாதிகள் வன்முறை வெறியாட்டம் நடத்திய பகுதிகளை, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில், நீதிபதிகள் விக்ரம்ஜித் சென், ஏ.கே, பட்நாயக் ஆகியோர் வியாழன் அன்று நேரில் பார்வையிட்டனர்.

வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களையும் நேரடியாக சந்தித்து பேசினார். பின்னர் ஓய்வுபெற்ற நீதிபதி ஜோசப் குரியன் செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “டெல்லி வன்முறை அதிர்ச்சியான சம்பவம். இந்நிலையில், வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்க்கும்போது பேரதிர்ச்சியாக உள்ளது. டெல்லியில் பலர் வீட்டை இழந்துள்ளனர். பலர் உடமைகளை, வாகனங்களை, சொத்துக்களை இழந்துள்ளனர், இன்னும் பலர் உறவுகளை இழந்துள்ளனர். சிலர் மீட்பு முகாம்களில் இருக்கிறார்கள். முகாம்களில் நிலைமை மிக மோசமாக இருக்கிறது. அவர்கள் தங்கள் வீட்டிற்கு செல்லவே பயப்படுகின்றனர். இதற்கு உரிய உதவியை சட்ட அமைப்புகள் செய்து தரவேண்டும். வழக்கறிஞர்கள், மூலம் இவர்களுக்கு உதவவேண்டும். முக்கியமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி அளிக்க வேண்டும். பல்கலைக்கழக நிர்வாகங்கள் மற்றும் மாணவர்களை இதற்காக பயன்படுத்த வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.

மேலும், “யார் தவறு செய்தார்கள் என்பதை பார்ப்பதற்காக அல்லாமல், நிலைமை எப்படி இருக்கிறது என்பதை பார்க்கவே தங்கள் குழு சென்றதாகவும் நீதிபதி குரியன் ஜோசப் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.