‘CAA சட்டம் அனைத்து மதத்தினருக்கும் எதிரானது: தொடர்ந்து போராட வேண்டும்’ -முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி

0

பாஜகவின் மதவாத சட்டங்களான CAA-NRC-NPR-ஐ எதிர்த்து நாடு முழுவதும் மக்கள் போராடி வரும் நிலையில் சில நாட்களாக தமிழகத்திலும், டெல்லி ஷாஹின் பாகின் நடைபெறும் தொடர் போராட்டம் போல நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து மக்கள் அதிகார அமைப்பு சார்பில் அஞ்சாதே போராடு என்ற தலைப்பில் திருச்சி உழவர் சந்தையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கோபால கவுடா பேசுகையில், “1949இல் அரசியலமைப்பு பேரவையில் நடைபெற்ற விவாதத்தின்போது உரிமை என்பது மதம் அடிப்படையில் இருக்க கூடது என்று எடுத்துரைக்கப்பட்டுள்ளது. கடந்த 2003ஆம் ஆண்டு இயற்றப்பட்ட 2004 முதல் செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டவிரோதமானது. குடியுரிமையை கேள்விக்குறியாக்கும் செயலை மத்திய பாஜக அரசு செய்து வருகிறது.

முக்கியமாக ஆறு மதங்களை குறிப்பிடுவதுடன், முஸ்லிம் உள்ளிட்ட சில சிறுபான்மை மதங்கள், சில சமய பிரிவுகள், சில நாடுகள் ஆகியவற்றை விலக்குகிறது. இதன் மூலம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 14 ,15 பிரிவுகளில் பாஜக அரசு மீறியுள்ளது.

தேசிய குடிமக்கள் பதிவேடு கட்டாயமாக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசியல் அமைப்பு சட்ட பிரிவுகளின்படி பல்வேறு வழக்குகளில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகள் மூலம் நமது உரிமைகளை உறுதி செய்யப்பட்ட நிலையில் மத்திய அரசு மீற முடியாது.

குடியுரிமை திருத்த சட்ட விதிகள் கள்ளக் குழந்தை என்று சொல்ல முடியாது. தாய் தந்தை இல்லாத அனாதை குழந்தைகள் போன்று இவ்விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. CAA-NRC-NPR இந்த சட்டம் இஸ்லாமிய மதத்திற்கு மட்டும் அல்ல, அனைத்து மதத்தினருக்கும் எதிரானது. ஆகவே, பொதுமக்கள் ஒருபோதும் விட்டுக்கொடுக்காமல் தொடர்ந்து இச்சட்டத்ததை எதிர்த்து போராட வேண்டும்” என்றார் முன்னாள் நீதிபதி கோபால கவுடா

Comments are closed.