டெல்லி வன்முறைக்கு மோடியும், அமித்ஷாவும் தான் காரணம்- திருமாவளவன் குற்றச்சாட்டு

0

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லியில் நடக்கும் போராட்டத்தின் போது நடைபெற்ற வன்முறைக்கு நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பொறுப்பேற்க வேண்டும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை குறித்து தெரிவித்துள்ள திருமாவளவன், ‘இந்த வன்முறை  வேதனை அளிக்கிறது. இது போன்ற வன்முறை வெடித்தது சட்டம் ஒழுங்கு சீர்குலைவு. அதற்கு நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தான் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கான எதிர்ப்பு என்பது மோடி அரசின் நடவடிக்கைகளுக்கு எதிரானது மட்டுமே. இது இந்து சமூகத்திற்கு எதிரானது என பார்ப்பது திசைதிருப்பக்கூடிய அரசியலாகும். மோடி அரசு தன்னுடைய நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யவேண்டும். குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெற வேண்டும்.

NRC-NPR சட்டங்களை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று அறிவிக்க வேண்டும். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாட்டு மக்களின் உணர்வுகளை மதித்து குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று அறிவிக்க வேண்டும்’ இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, மக்கள் தொகை பதிவேடு ஆகிய மதவாத சட்டங்களை எதிர்த்து எதிர்த்து திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று பேரணி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.