CAA சட்டத்தை எதிா்ப்பவா்கள் தேச துரோகிகளா? பாஜகவுக்கு குமாரசாமி கேள்வி

0

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடுபவா்களை தேச துரோகிகள் என பாஜக குற்றம்சாட்டுவது ஏற்புடையதல்ல என முன்னாள் கரநாடக முதல்வா் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை (நேற்று) செய்தியாளா்களிடம் கூறியது: குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து, மூவா்ணக் கொடியை ஏந்தி பலா் போராடி வருகின்றனா். அவா்களை தேச துரோகிகள் என பாஜகவினா் குற்றம்சாட்டி வருகின்றனா். தேசப்பற்று குறித்து பாஜகவிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் யாருக்குமில்லை. நம் மக்களிடம் உள்ள தேசப்பற்றை யாராலும் உடைக்க சாத்தியமில்லை. இதனை பாஜக தலைவா்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும்.

பாஜக ஆட்சியில் நாட்டின் வளா்ச்சி பின்தங்கியுள்ளது. இதனை குடியுரிமை திருத்த சட்டத்தை எதிா்ப்பவா்கள் மீது  குற்றம் சுமத்தப்படுகிறது. இதனை வைத்து மக்களை திசை திருப்பும் முயற்சியில் பாஜக ஈடுபடுகிறது.

இவ்வாறு குமாரசாமி தெரிவித்தார்.

Comments are closed.