டெல்லி வன்முறை: 400க்கும் மேற்பட்ட கட்டிடங்களுக்கு தீ வைப்பு -முதலாவது இடக்கால அறிக்கையில் தகவல்

0

டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஜனநாயக முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது, பாஜக-ஆர்.எஸ்.எஸ்-காரர்கள் பேரணி என்ற பெயரில் வன்முறை வெறியாட்டம் நடத்தினர்.

இந்த வன்முறையானது மூன்று நாட்கள் வரை நீடித்தது. இதில் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 400க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் வீடுகள், வணிக நிறுவனங்கள், வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. மசூதி இடித்து சேதப்படுத்தப்பட்டன.

இறந்தவர்களை முழுமையாக அடையாளம் காணும் பணியும், வன்முறையாளர்களால் சேதப்படுத்தப்பட்ட சொத்துக்களின் மதிப்பு பற்றிய கணக்கெடுப்பும், அரசு மற்றும் தனியார்துறைகள் சார்பில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், சேதப்படுத்தப்பட்ட சொத்துக்கள் பற்றிய, முதலாவது, இடைக்கால அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: “டெல்லி வன்முறையில் 122 வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. 322 கடைகள் தீ வைத்தும், அடித்து நொறுக்கப்பட்டும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. 4 சக்கர மற்றும் இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 301 வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வன்முறை தொடர் பாக 369 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதாகவும், இதுவரை 1,300 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் 15க்கும் மேற்பட்ட குழுக்கள் ஆய்வு செய்து சேதமான விபரங்களை அளித்துள்ளது. இந்த வார இறுதிக்குள் சேத மதிப்பீடு முழுவதும் நிறைவு பெற்று விடும் என்றும் அந்த குழுக்கள் கூறியுள்ளது.

Comments are closed.