“CAAக்கு எதிரான போராட்டத்திற்கு தடை இல்லை” -உயர்நீதிமன்றம்

0

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அனுமதியின்றி போராட்டம் நடந்துவருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கோபிநாத் என்பவர் வழக்கு தொடரந்தார். போக்குவரத்திற்கு சிரமம் ஏற்படுவதாக கூறி போராட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் அவரது மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் நடக்கும் போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை கேட்ட நீதிபதிகள், வழக்குப்பதிவு செய்த பின் ஏன் அனுமதியின்றி போராட்டம் நடத்துபவர்களை அப்புறப்படுத்தவில்லை என கேள்வி எழுப்பினார். மேலும் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபவர்களை கைது செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.

இந்நிலையில் நேற்றைய உத்தரவுக்கு எதிராக வழக்கறிஞர்கள் முறையீடு செய்தனர். அதில், “போராட்டத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்த கோபிநாத் மீது ஏற்கெனவே குற்றவழக்கு நிலுவையில் இருப்பதாகவும், அந்த குற்ற வழக்குகளை விசாரிக்காமல், இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கக்கூடாது” என்று வழக்கறிஞர்கள் முறையிட்டனர்.

இதனை தொடர்ந்து, மார்ச் 11 வரை இது தொடர்பான வாதங்களை முன்வைக்கலாம் எனவும் நேற்றைய உத்தரவை மார்ச் 11 வரை நிறுத்திவைப்பதாகவும் தீபதிகள் உத்தரவிட்டனர்.

Comments are closed.