உ.பியில் CAA போராட்டக்காரர்களுக்கு குற்றவாளி பேனர்: யோகி அரசுக்கு நீதிமன்றம் கண்டனம்

0

உத்தர பிரதேச மாநிலம் லக்னோ, ஹஸ்ரத்கஜ் ஆகிய ஊர்களின் சாலையிலும், அம்மாநில சட்டப்பேரவை முன்பும் சிஏஏவுக்கு எதிராக போராடியவர்களின் புகைப்படங்கள், முகவரிகள் பேனர்களாக வைக்கப்பட்டுள்ளன.

இவ்விவகாரம் குறித்து அலகாபாத் நீதிமன்றம்  விசாரணை நடத்தியது. அப்போது ‘போராட்டக்காரர்களின் புகைப்படத்தை பேனர்களாக வைத்தது அநியாயத்தின் உச்சம என யோகி ஆதித்யநாத் அரசுக்கு கண்டனம் தெரிவித்தது. இது தனிமனித சுதந்திரத்தை பறிக்கும் செயல்’ எனவும் தெரிவித்துள்ளது.

பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவர்களின் புகைப்படங்கள் தான் பேனர்களாக வைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடுவது சரியானதல்ல, எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் எதுவும் நிகழந்துவிடக்கூடாது என்பதற்காகவே பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது’ என அம்மாநில அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

சி.ஏ.ஏ சட்டத்தை எதிர்த்து போராடிய பொதுமக்களின் வீட்டிற்குள் அனுமதியின்றி சென்று தாக்குதல் நடத்தி, பொருட்களை அடித்து நொறுக்கி, நகை, பணம் ஆகியவற்றையும் உ.பி காவல்துறையினர் எடுத்துச்சென்றதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர். இவ்வாறு இருக்கும் நிலையில், பொது சொத்துகளை சேதப்படுத்தியவர்களைதான் பேனரில் குறிப்பிட்டுள்ளதாக பாஜக ஆதரவு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.