டெல்லி: CAA ஆதரவு பேரணி என்ற பெயரில் வன்முறை வெறியாட்டம் நடத்திய ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகள்

0

தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஷாஹின் பாக் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக ஆயிரகணக்கானோர்  போராட்டத்தை  நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஷாஹின் பாக்-ஐ தொடர்ந்து அடுத்தடுத்த பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்றது. வடகிழக்கு டெல்லியின் சீலாம்பூர், மவுஜ்பூர் பகுதிகளிலும் போராட்டத்தில் நடைபெற்றது.

மவுஜ்பூர் பகுதியில் சிஏஏ சட்டத்தை எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது, அதே பகுதியில் பாஜக கட்சியை சேர்ந்த கபில் மிஸ்ரா தலைமையில் CAAக்கு ஆதரவாக பேரணி நடைபெற்றது. அப்போது பாஜகவினர் சிஏஏ எதிர்ப்பு போராட்டக்கரர்கள் மீது கற்களை வீசி தாக்கினர். இதனால் அமைதியாக போராடிய பொதுமக்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் CAA போராட்டக்கரர்கள் மீது ஆர்.எஸ்.எஸ்-ஐ சேர்ந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். ஆனால் காவல்துறை அதனை தடுக்காமல் தாக்குதலுக்குள்ளான பொதுமக்கள் மீதே தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும் அப்பகுததியிலுள்ள இஸ்லாமியர்களின் வீடுகளையும்ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகள் சூறையாடினர். இதன் காரணமாக வடக்கு டெல்லி மற்றும் தெற்கு டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ் வன்முறை தொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “டெல்லியின் சில பகுதிகளில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைப்பது தொடர்பானது மிகவும் வருத்தமளிக்கும் செய்தி என்றும் மத்திய உள்துறை அமைச்சரை நான் மனதார கேட்டுக்கொள்கிறேன். சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்கவும். அமைதியும் நல்லிணக்கமும் பேணப்படுவதை உறுதிசெய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Comments are closed.