CAA எதிர்ப்பு போராட்டம்: 150க்கும் மேற்பட்ட இஸ்லாமிய மாணவர்கள் மீது வழக்குப்பதிவு

0

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 150 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டம் (சி,ஏ.ஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்) ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் ஒரு மாதத்திற்கு மேலாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் நேற்று உத்தர பிரதேசத்தில் உள்ள ஷாஜமால் பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட அலிகார் முஸ்லீம் பல்கலைக் கழக மாணவர்கள், ஜாமியா மில்யா பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்டோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.