CAAவுக்கு எதிராக போராட்டம் நடத்திய JNU முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித் UAPA சட்டத்தின் கீழ் கைது

0

வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட வன்முறைகள் தொடர்பான வழக்கில் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் (ஜே.என்.யூ.) முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித், UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்திய பாஜக அரசின் சி.ஏ.ஏ.வுக்கு (குடியுரிமை திருத்த சட்டம்) எதிராக நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. வடகிழக்கு டெல்லியில் பிப்ரவரி மாதம் நடந்த போராட்டத்தில் இந்துத்துவ பயங்கரவாதிகள் போராட்டக்காரர்களை தாக்கி வன்முறையாக மாற்றினர்.

இந்த வன்முறைகளில் 54 பேர் கொல்லப்பட்டனர். 600 பேர் படுகாயமடைந்தனர். இவர்களில் 97 போராட்டக்கரர்களுக்கி துப்பாக்கிச் சூட்டு காயங்கள் இருந்தன. இது தொடர்பாக டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் மாணவர் அமைப்புகளின் தலைவர்களான மீரான் ஹைதர், சஃபூரா ஜார்கர் உள்ளிட்டோர் UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜனநாயக முறையில் போரட்டத்தை நடத்திய இவர்கள் மீது UAPA சட்ட வழக்கில் கைது செய்து, வன்முறை நடத்தியவர்களை கண்டுக்கொள்ளாமல் டெல்லி அரசின் காவல்துறை இருந்து வருகிறது.

டெல்லி கலவர வழக்கில் சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி பெயரும் துணை குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜே.என்.யூ. முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித், UAPA சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார். உமர் காலித்திடம் 11 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த வழக்கில் இதுவரை மொத்தம் 751 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,575 பேர் கைதாகி உள்ளனர். கைதானவர்களில் பலர் ஜனநாயக முறையில் போராட்டம் நடத்தியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply