CAA எதிர்ப்பு போராட்டம்: சிறுவர்களை சித்ரவதை செய்யும் உ.பி. காவல்துறை

0

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின்போது, பிஜ்னோர், முசாபர்நகர், ஃபிரோசாபாத் மற்றும் உத்தரபிரதேசத்தின் பிற மாவட்டங்களில் உ.பி. காவல்துறை காவலில் இருந்தது. அப்போது,​​ 40க்கும் மேற்பட்ட சிறுவர்களை உடல் மற்றும் உளவியல் சித்திரவதைக்கு காவல்துறையினர் உட்படுத்தியதாக ‘தி குயிண்ட்’ செய்தி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

சிறுவர்களை தனது கஸ்டடியில் வைத்து உ.பி. காவல்துறையினர் இரவு நேர கடும் குளிரில் போர்வை வழங்கவில்லை.

இது குறித்து 17வயது சிறுவன் கூறுகையில்: இரவில் தூக்கம் வரும். நான் எனது கைகளை வைத்து இருகண்களையும் திறந்துவத்தே இருந்தேன். சிறிது நேரம் கண்களை மூடினாலும் (தூங்கினால்) போலிஸார் அடிப்பார்கள்.

சிறுவர்களை உளவியல் முறைகளிலும் காவல்துறை கொடூரமாக சித்ரவதை செய்துள்ளது.

சிறுவன் ஒருவன் நோன்பு நோற்றிருந்தான். அப்போது மாலை நேரமாகிவிட்டதால் சிறுவன், போலிஸிடம் தண்ணீர் கேட்டுள்ளான். ஆனால் போலிஸார் தண்ணீர் வழங்க மறூத்துவிட்டனர். மேலும் இஸ்லாம் மதத்தை இழிவு செய்ததுடன், சிறுவர்களை ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கூற சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளனர்.

பிஜ்னோரை சேர்ந்த சிறுவன் கூறுகையில்: எங்களுக்கு மிகவும் தாகம் ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் தண்ணீர் வழங்கினர். ஆனால் சிறுநீர் கழிக்கக்கூட விடாமல் கடுமையாக தாக்கினர் என்றான்.

காவல்துறையினர் சுமார் இரண்டு மணி நேரம் இடைவிடாமல் சிறுவர்கள் மீது தடியது நடத்தியுள்ளனர். மூன்று நாட்களாக கஸ்டடியில் வைத்து போலிஸார் கடுமையாக தாக்கினர். அதனால் 15 நாட்களாக நடக்க இயலவில்லை என்று பாதிக்கப்பட்ட சிறுவன் கூறினான்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக எந்தவித போராடங்களிலும் ஈடுப்படாத முஸ்லிம் சிறுவர்களை, காவல் பணிக்காக வந்த காவல்துறையினர் கஸ்டடியில் வைத்து  உடல் மற்றும் உளவியல் முறையில் சித்ரவதை செய்துள்ளதாக குயிண்ட் செய்தி தெரிவித்துள்ளது.

மேலும் போராட்டக்காரர்கள் எங்களுக்கு கட்டுப்பட வேண்டும் என காவல்துறை மிரட்டியுள்ளனர். பின்னர் போராடட்டத்தில் இருந்த பலரை காவல்துறையினர் கைது செய்தனர்.

முஜாஃபர்நகரில் பல வீட்டில் அனுமதியின்றி நுழைந்த காவல்துறையினர், நகை, பணம் அனைத்தையும் எடுத்துச்சென்று விட்டதாகவும், வீடுகளை சேதப்படுத்தியதாகவும் பாதிக்கப்பட்டோர் தெரிவித்தனர்.

காவல்துறையினர் மீறிய சட்டங்கள்:

குழந்தைகள் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாட்டின் (யு.என்.சி.ஆர்.சி) கீழ், குழந்தைகள் சித்திரவதைக்கு எதிராக தெளிவான வழிகாட்டுதல்கள் வகுக்கப்பட்டுள்ளன. குழந்தையின் நல்வாழ்வு, உயிர்வாழ்வு மற்றும் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்க சர்வதேச சட்டம் நாடுகளை வலியுறுத்துகிறது.

உ.பி.யில் சிறார்களுக்கு எதிரான வன்முறை வழக்குகள் அனைத்திலும், தேசிய மற்றும் சர்வதேச சட்டங்கள், கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களின் தெளிவான மீறல் உள்ளது.

Comments are closed.