‘CAA போராட்டத்திற்கு சாக வேண்டும் என்ற எண்ணத்துடன் வருவதால் பலியாகுகின்றனர்’ -யோகி

0

குடியுரிமைத் திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்ட வெடித்துள்ளது. அதுபோல் உத்தரப்பிரதேச மாநிலத்திலும் CAAக்கு எதிரான போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் பலியாகினர். இது தொடர்பாக நேற்று உ.பி. சட்டமன்றத்தில் யோகி ஆதித்யநாத் பேசியதாவது:

போராட்டக்காரர்களின் நோக்கம் சாக வேண்டும் என்றுள்ளது. அவ்வாறு இருக்கும்பட்சத்தில் எப்படி உயிருடன் இருக்க முடியும்? போலீஸாரின் துப்பாக்கிச்சூட்டால் போராட்டக்காரர்கள் பலியாகவில்லை. கலவரக்காரர்கள் நடத்திய துப்பாகிச்சூட்டால் தான் அவர்கள் பலியாகினர்.

சுதந்திரம் வேண்டும் என்ற கோஷங்கள் எழுப்பப்படுகின்றன, என்ன சுதந்திரம் வேண்டும்? காந்தியின் கனவை நோக்கி நாம் பணியாற்ற வேண்டுமா அல்லது ஜின்னாவின் கனவை நோக்கி பணியாற்ற வேண்டுமா? உத்தர பிரதேசத்தில் எந்த கலவரமமும் ஏற்படவில்லை இல்லை.

நான் எப்போதும் ஜனநாயக ரீதியிலான போராட்டத்தை ஆதரிக்கிறேன். ஆனால் வன்முறையில் ஈடுபடுவோருக்கு அவர்கள் பாணியில் பதிலடி கொடுப்போம்” என்றார்.

சில தினங்களுக்கு முன், அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தில் 22 பேர் பலியானதாகவும் 883 பேர் மீது எஃப்.ஐ.ஆர். போடப்பட்டுள்ளது என்றும் உ.பி. அரசு தெரிவித்தது. மேலும் அனுமதியின்றி பொதுமக்களின் வீட்டிற்குள் சென்று தாக்குதல் நடத்தி, பொருட்களை அடித்து நொறுக்கி, நகை, பணம் ஆகியவற்றையும் உ.பி காவல்துறையினர் எடுத்துச்சென்றதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.

ஆனால், போலீஸாரின் துப்பாக்கிச்சூட்டினால் யாரும் பலியாகவில்லை. சாகும் எண்ணத்துடனே போராட்டதிற்கு வருவதால், அவர்கள் சாகுகின்றனர் என்று சட்டமன்றத்தில் யோகி பேசியது கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Comments are closed.