உ.பி-யில் CAAக்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது தேசதுரோக வழக்கு

0

உத்தர பிரதேச மாநிலம் பிலாரியாகஞ்ச் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதற்காக 135 போ் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனா். மேலும் அவர்களில் 20 போ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தெரிவித்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் திரிவேணி சிங், “பிலாரியாகஞ்ச் பகுதியில்  சிஏஏவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 135 போ் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 100 போ் மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த போராட்டம் உலமா கவுன்சில் தேசிய பொதுச் செயலா் தாஹிா் மத்னி தலைமையில் நடைபெற்றது. அவரை புதன்கிழமை கைதாகினார்” என்று திரிவேணி சிங் கூறினாா்.

இதனிடையே போராட்டம் குறித்து ஜாகிா் என்பவா் கூறுகையில்,‘பிலாரியாகஞ்ச் பகுதியில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட சிறுவர்கள் உட்பட 19 போ் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டனா்.

அமைதி வழியில் போராடிய பெண்கள் அமா்ந்திருந்த இடத்தில்  தொழுகை மேற்கொள்வதற்காக எழுந்தபோது, அவா்களை போலீஸாா் இழிவான வாா்த்தைகளால் திட்டினர். போலீஸாா் அவர்கள் அச்சுறுத்தி, கடுமையாக தாக்கினா். பலத்த தாக்குதலுக்கு ஆளான பெண் ஒருவா், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். போராட்டக்காரா்களை தாக்கிய போலீஸாா், அவா்கள் மீது கற்களையும் எறிந்தனா்’ என்றாா்.

Comments are closed.