முத்தலாக் தடை சட்டத்திற்கு எதிரான வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

0

முத்தலாக் தடை சட்டத்திற்கு எதிரான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிடுத்துள்ளது.

இஸ்லாமிய பெண்களை விவாகாரத்து செய்வதில் புதிய கட்டுபாடுகளை முத்தலாக் தடை சட்டம் கொண்டு வருவதாக தெரிவித்துள்ள மத்திய அரசு, மாநிலங்களவையில் நிறைவேற்றியது. இந்த் சட்ட மசோதாவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.

இந்த சட்டத்தின்படி, தலாக் கூறி விவாகரத்து செய்யும் ஆணுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கலாம் என்பதாகும்.

மனைவி மற்றும் குழந்தைக்கு கணவன் நிதி வழங்குவது குறித்து நீதிபதி முடிவு செய்யலாம். மேலும் கைது செய்யப்படும் நபருக்கு, அவரது மனைவியின் கருத்துக்களை கேட்டபிறகு ஜாமீன் வழங்குவது குறித்து நீதிபதி முடிவு செய்யலாம் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.