தாக்கப்பட்ட JNU மாணவ தலைவர்: குற்றவாளியை வேட்பாளராக அறிவித்த சிவசேனா!

0

கடந்த ஆண்டு, சமுக ஆர்வலர் மற்றும் முன்னாள் ஜே.என்.யூ மாணவர் சங்கத் தலைவர் உமர் காலித் மீது தாக்குதல் நடத்திய இருவரில் ஒருவர் நவீன் தலால்.  இவரை அக்டோபர் 21ஆம் தேதி ஹரியானா சட்டமன்றத் தேர்தல் வேட்பாளராக சிவசேனா அறிவித்தது.

ஆகஸ்ட் 2018 இல், டெல்லியில் உமர் காலிதை தாக்கிய, தலால் மற்றும் ஷாப்பூர் தப்பித்துவிட்டனர். பின்னர் அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் இவ்வழக்கில் தலால் தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார்.

ஹரியானா (தெற்கு) தலைவரான விக்ரம் யாதவ், ‘தலால் பசு பாதுகாப்பு போன்ற பிரச்சனைகளுக்காக போராடி வருகிறார். தேச விரோத கோஷங்களை எழுப்புபவர்களுக்கு எதிராக பேசுகிறார். எனவே, நாங்கள் வேட்பாளராக அறிவித்துளோம்’ என்றார்.

தாக்குதல் குறித்து கேள்வி கேட்டதற்கு, இதைப் பற்றி ‘இந்த தருணத்தில்’ பேச விரும்பவில்லை என்று தலால் கூறினார். ‘இது உமர் காலித் பற்றி மட்டுமல்ல. இன்னும் நிறைய இருக்கிறது. எல்லாவற்றையும் பற்றி ஒரு நாள் பேசுவேன்’ என்றார் தலால்.

தேர்தலுக்காக, தலாலின் பிரச்சார சுவரொட்டிகளில் அவரது பெயருக்கு முன் ‘கௌ ரக்ஷக்’ என்ற சேர்க்கப்பட்டுள்ளது.

Comments are closed.