மோடிக்கு கடிதம் எழுதிய 50 பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்கு!

0

நாட்டில் சிறுபான்மை மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு திரைப்பட இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் மோடிக்கு ஜூலை மாதம் கடிதம் ஒன்றை எழுதியிருந்தனர்.

மணிரத்னம், அடூர் கோபாலகிருஷ்ணன், அனுராக் காஷ்யப், அபர்ணா சென், கொங்கொனா சென் சர்மா, சவுமிதா சாட்டர்ஜி உள்பட 50 திரை பிரபலங்கள் சேர்ந்து அந்த கடிதத்தில் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று பீகாரின் முசாபர்பூரில் ராம்சந்திர குஹா, மணி ரத்னம் மற்றும் அபர்ணா சென் உள்ளிட்ட 50 பிரபலங்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

நாட்டின் உருவாக்கத்தை சீர்குலைத்ததாகவும், பிரதமரின் செயல்திறனுக்கு களங்கம் ஏற்படுத்தியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், தேசத் துரோகம், மத உணர்வுகளை புண்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Comments are closed.