சென்னை ஐஐடி-யில் தான் அதிக வன்கொடுமை- தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம்!

0

சென்னை ஐ.ஐ.டி-யில் நிகழும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய அதிகாரி ஸ்வராஜ் வித்வான் ஆய்வு செய்தார்.

சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டு மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களிடம் கருத்துகளை கேட்டறிந்தார்.

அதன் பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய அவர். “மாணவர்களின் தற்கொலை சம்பவங்கள் ஐஐடியில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தாழ்த்தப்பட்ட பிரிவு மாணவர்கள் உளவியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாகவும், மாணவ சேர்க்கை மற்றும் பணி நியமனங்களில் இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திற்கு புகார்கள் வந்தன.

மற்ற ஐஐடி-களை ஒப்பிடும்போது சென்னை ஐஐடியின் நிலைமை கவலை அளிக்கும் விதமாக உள்ளது. இங்கு தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகமாக உள்ளது. ஐஐடி-யில் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை, 17 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இடஒதுக்கீடும் இங்கு முழுமையாக பின்பற்றப்படவில்லை. மொத்தமுள்ள 2,322 முதுநிலை அறிவியல் இடங்களில், இதுவரை 47 எஸ்சி, 6 எஸ்டி பிரிவு மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். பிற்படுத்தப்பட்ட பிரிவினர்களுக்கு உடல் மற்றும் மனரீதியில் துன்புறுத்தப்படுவதாக மாணவர்கள், ஊழியர்கள் தரப்பில் புகார்கள் தெரிவிக்கப்படு” இவ்வறு தெரிவித்தார்.

Leave A Reply