உலகிலேயே செலவு குறைந்த நகரங்களின் பட்டியலில் சென்னை

0

உலகிலேயே மிகவும் செலவு குறைந்த நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் மூன்று நகரங்கள் இடம்பெற்றுள்ளது.

பிரிட்டனை சேர்ந்த ‘ECONOMIST INTELLIGENCE UNIT’ என்கிற நிறுவனம் சார்பில் உலகம் முழுவதும் உள்ள நகரங்களில் நிலவும் விலைவாசியை மையமாக கொண்டு ஆய்வு ஒன்று எடுக்கப்பட்டது. அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நேற்று இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.

இந்த ஆய்வில் உலகிலேயே வாழ்வதற்கு அதிக செலவுகள் ஏற்படும் நகரமாக பிரான்ஸ் தலைநகரம் பாரீஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளது.இதற்கு அடுத்த இடங்களில் சிங்கப்பூர், ஹாங் காங், ஸ்விட்சர்லாந்தின் ஜூரிச், ஜப்பானின் ஒஸாகா, ஜெனிவா ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து உலகிலேயே செலவு குறைந்த நகரங்களின்பட்டியலில் இந்தியாவின் மூன்று நகரங்கள் இடம்பெற்றுள்ளது. இதில் இந்தியவின் தலைநகரமான டெல்லி, தமிழகத்தின் தலைநகரமான சென்னை, கர்நாடகா தலைநகரான பெங்களூரு ஆகியவை தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Comments are closed.