ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ அதிவிரைவு ரயில்களில் ஏசி முதல் வகுப்பு மற்றும் எக்ஸிகியூட்டிவ் பிரிவு பயணிகளுக்கு விற்பனை செய்யும் உணவு பொருட்களின் விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளது.
பயணிகளுக்கு விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களின் புதிய விலை:
தேநீர் 6 ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ.35 ஆகவும், காலை சிற்றுண்டி ரூ.7 உயர்த்தப்பட்டு ரூ.140 ஆகவும், நண்பகல் உணவு, இரவு உணவு ரூ.15 உயர்த்தப்பட்டு ரூ.245 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
2ஆம் வகுப்பு ஏசி பிரிவு, 3-ம் வகுப்பு ஏசி மற்றும் சேர் கார் பிரிவில், தேநீர் விலை 5 ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ.20 ஆகவும், காலை உணவு 8 ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ.105 ஆகவும், நண்பகல் உணவு மற்றும் இரவு உணவு 10 ரூபாய் அதிகரிக்கப்பட்டு ரூ.185 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஐஆர்சிடிசி வெளியிட்ட அறிவிப்பில், “பயணிகளுக்கும் தரமாகவும், அளவில் சரியான அளவில் இருக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிதுள்ளது”.