“சீனாவை விட பெரிய எதிரி பாஜக தான்” -மோடி அரசை சாடிய ஆகார் படேல்

0

லடாக் எல்லையில் கடந்த திங்கட்கிழமை இந்திய- சீன ராணுவத்தினருக்கு இடையே நடந்த கடும் மோதலில், இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர்.

லடாக் நிலவரம் குறித்து எதிர்க்கட்சிகளுக்கு விளக்கும் வகையில் மோடி நேற்று மாலை வீடியோ கான்பரன்சிங் மூலமாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினார். இந்நிலையில் மோடி இந்தியா அமைதியையே விரும்புகிறது என்று தெருவித்தார்.

இச்சூழலில் சீனப் பொருட்களை பயன்படுத்துவதை இந்தியர்கள் தவிர்க்கவேண்டும் என்றும், சீன பொருட்களின் இறக்குமதிக்கு தடைவிதிக்க வேண்டும் எனவும் பாஜக ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

கொரோனா பேரிடரில் இருந்து மக்களை பாதுகாப்பத்தில் தோல்வி அடைந்ததால் மோடி அரசு சீன பிரச்சனையை கையில் எடுத்து அரசியல் செய்வதாக பல்வேறு தரப்பினர் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், சீனாவை விட பெரிய எதிரி பாஜகத்தான் என முன்னாள் அம்னெஸ்டி இந்தியா தலைவர் ஆகார் படேல் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து ஆகார் படேல் வெளியிட்டு ட்விட்டர் பதிவில், “சீனா ஒரு எதிர்ப்பாளர்தான். ஆனால் நம் உண்மையான எதிரி விரோதி பாஜக தான். சீனாவிற்கு குறிக்கோள் உள்ளது. சீனா நம்மை உள்ளிருந்து கொடுக்கப்போவதில்லை. ஆனால் பாஜக நம்முடன் இருந்துக்கொண்டு உள்ளிருந்தே நம்மை கெடுக்கிறது” என தெரிவித்துள்ளார். அவரின் கருத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவு வந்துக்கிண்டிருக்கும் நிலையில் பாஜகவினர் ஆகார் படேல்-ஐ கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Comments are closed.